உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வளர்ந்து கிடக்கும் முட்செடிகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வளர்ந்து கிடக்கும் முட்செடிகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கரூர்: பொது இடம், காலி மனைகளில் வளர்ந்து கிடக்கும் முட்செடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட புறநகர் பகுதிகளான தாந்தோன்றிமலை, சணப்பிரட்டி, வெங்கமேடு பகுதிகளில் அதிகளவு தனியார், அரசுக்கு சொந்தமான காலியிடங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் கருவேல முட்செடிகள் வளர்ந்து, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நிலத்தடி நீர்மட்டத்தை வெகுவாக பாதிக்கும் என்பதால், கருவேல முட்செடிகளை அகற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சில இடங்களில் அகற்றப்பட்டது. தற்போது அதிகளவு முட்செடிகள் வளர்ந்து, சுற்றுப்புற பகுதியை பாதித்து வருகின்றன. எனவே, முட்செடிகளை அகற்ற நடவடிக்கை தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை