உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே இறைச்சி கழிவுகள் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

கரூர் அருகே இறைச்சி கழிவுகள் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

கரூர் : கரூர் அருகே, இறைச்சி கழிவுகள் அகற்றப்படாததால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அந்த பகுதியில் தொற்று நோய் அபாயம் உள்ளது.கரூர்-சேலம் பழைய சாலை வெண்ணைமலை சேரன் நகர் பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் வெங்கமேடு பகுதியில் செயல்படும், 20க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளில் இருந்து, கழிவுகள் இரவு நேரத்தில் சேரன் நகரில் கொட்டப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகமோ, காதப்பாறை பஞ்சாயத்து நிர்வாகமோ அகற்றுவது இல்லை. இதனால் சேரன் நகர் பகுதியில், குவிந்துள்ள இறைச்சி கழிவுகளில் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், இறைச்சி கழிவுகளை உடனடியாக அகற்ற உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை