உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கடை வீதியாளர்களிடம் சொத்து ஆவணங்கள் உள்ளது: ஆடிட்டர்

கடை வீதியாளர்களிடம் சொத்து ஆவணங்கள் உள்ளது: ஆடிட்டர்

கரூர்: '' கரூர் கடைவீதியாளர்களிடம், அனைத்து விதமான சொத்து ஆவணங்களும் உள்ளது,'' என, கரூர் கடைவீதி சொத்து உரிமை-யாளர் ஆலோசனை கூட்டத்தில், ஆடிட்டர் முத்துராமன் தெரி-வித்தார்.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள, 105 இடங்களுக்கு, சட்டப்பிரிவு, 78-ன் கீழ் அகற்ற திருப்பூர் ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என, திருத்தொண்டர்கள் சபை நிறுவன தலைவர் ராதா கிருஷ்ணன், நேற்று முன்தினம் தெரிவித்-திருந்தார். இந்நிலையில், கரூர் கடைவீதி (ஜவஹர் பஜார்) சொத்து உரிமை-யாளர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று மாலை ஜவஹர் பஜாரில் உள்ள, தனியார் மண்டபத்தில் நடந்தது.அதில், ஆடிட்டர் முத்துராமன் பேசியதாவது: கடந்த, 1963ல் வெளியான கரூர் டவுன் நிலப்பதிவேடு டி.எஸ்.எல்.ஆர்., ஒன்றிய மற்றும் மாநில அரசு துறைகள், நீதிமன்றங்கள், வங்கிகள் மற்றும் பதிவுத்துறைகள் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த இடங்கள் எல்லாம், அரசால் வழங்கப்பட்ட செட்-டில்மென்ட் வீட்டுமனை பட்டாக்கள் மூலம், பதிவு செய்யப்-பட்டு, காலம், காலமாக உரிமை மாற்றம் செய்யப்பட்டு வருகி-றது. அதன்படி, கரூர் கடைவீதியாளர்களிடம், அனைத்து வித-மான சொத்து ஆவணங்கள் உள்ளது.திருப்பூர் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரும், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, கடை வீதியாளர்க-ளிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, எங்களது உரிமை ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளோம்.இந்நிலையில், திருத்தொண்டர் சபையின் தலைவராக உள்ள ராதா-கிருஷ்ணன், பொது மக்களை பாதிக்கக்கூடிய செயல்களை செய்து வருகிறார். கரூர் கடைவீதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து, மேல்முறையீடு செய்துள்ளோம் என, ஹிந்து சமய அறநி-லையத்துறை ஆணையரிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு பேசினார். அப்போது, கரூர் நகர ஷராப் வர்த்தகர்கள் சங்க தலைவர் ரவீந்திர குமார் மற்றும் தொழில் அதிபர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை