உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குறுவள அளவிலான கலைத்திருவிழா போட்டி; மாணவ, மாணவியர் பங்கேற்பு

குறுவள அளவிலான கலைத்திருவிழா போட்டி; மாணவ, மாணவியர் பங்கேற்பு

குறுவள அளவிலான கலைத்திருவிழாபோட்டி; மாணவ, மாணவியர் பங்கேற்புகரூர், அக். 23- கரூர் மாவட்டத்தில், எட்டு வட்டாரங்களில் குறுவள அளவிலான கலைத்திருவிழா போட்டியில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 2022 முதல் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி கரூர் மாவட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் கலைத் திருவிழா போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடந்து வருகிறது. மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதை கூறுதல், பேச்சு உட்பட பல்வேறு போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பள்ளி அளவிலான போட்டிகள் முடிவடைந்தன.குறுவள அளவிலான போட்டிகள் நேற்று முன்தினம், நேற்று நடந்தது. மாவட்டத்தில் எட்டு வட்டாரங்களில் உள்ள, 60க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டது. 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். குறுவள போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, வட்டார அளவிலான போட்டிகளில்பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை