மேலும் செய்திகள்
கனக தோனியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
3 hour(s) ago
கரூரில் சூரசம்ஹார விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்
3 hour(s) ago
கணவன் மாயம் மனைவி புகார்
3 hour(s) ago
பருவமழை முன்னேற்பாடு நெடுஞ்சாலைத்துறை ஒத்திகை
3 hour(s) ago
குளித்தலை: குளித்தலை அடுத்த, கழுகூர் பஞ்., பிள்ளைக்கோடாங்கிப்பட்டியில் அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப், ஊர் பொதுமக்கள் சார்பாக, 4ம் ஆண்டு மாநில அளவிலான தொடர் கபடி போட்டி நடந்தது. இங்குள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோவில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் இரு நாட்கள் மாநில அளவில் கபடி போட்டி நடந்தது.கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 42 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் கரூர் மாவட்டம், நாகனுார் கே.எம். ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், பிள்ளைக்கோடங்கிப்பட்டி அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. முடிவில் கே.எம். ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்று முதல் பரிசாக, 10 ஆயிரத்து, 24 ரூபாய் மற்றும் சுழற் கோப்பையை தட்டிச்சென்றது.இரண்டாவது பரிசாக, 7,024 ரூபாய், சுழற் கோப்பையை பிள்ளைக்கோடங்கிப்பட்டி அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி பெற்றது. மூன்றாவது பரிசாக, 5,024 ரூபாய், சுழற் கோப்பையை திம்மாச்சிபுரம் சகாதேவன் ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி குழுவினரும், நான்காவது பரிசாக, 4,024 ரூபாய், சிறப்பு கோப்பையை செம்பாறை கல்லுப்பட்டி கிளப் அணி பெற்றனர்.கால் இறுதியில் தோல்வியுற்ற அணிகளுக்கு, 2,000 முதல், 5,000 ரூபாய் வரை சிறப்பு பரிசுகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago