| ADDED : மே 09, 2024 06:28 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் பஸ் நிறுத்தம், மேட்டு மருதுார் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில், வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், ஓ.ஆர்.எஸ். உப்பு கரைசல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செயல் அலுவலர் விஜயன் தலைமை வகித்து, பொது மக்களுக்கு ஓ.ஆர்.எஸ். உப்பு கரைசல் வழங்கினார். டவுன் பஞ்., இளநிலை உதவியாளர் சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் பாக்கியம் மற்றும் அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.* நங்கவரம் டவுன் பஞ்., சார்பில் நங்கவரம் சாத்தாயி அம்மன் கோவில் பஸ் நிறுத்தம், மற்றும் நச்சலுார் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில், பொதுமக்களுக்கு உப்பு கரைசல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செயல் அலுவலர் காந்தரூபன், மக்களுக்கு உப்பு கரைசல் வழங்கினார்.* குளித்தலை நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்டு, கடைவீதி பகுதியில் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். உப்பு கரைசல் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர், பொறியாளர், சுகாதார ஆய்வாளர் லோகநாதன், சுகாதார மேற்பார்வையாளர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு உப்பு கரைசல் வழங்கினர்.