உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நில அளவை அலுவலர் சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம்

நில அளவை அலுவலர் சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். இணை செயலாளர் கபிலன் வரவேற்றார். நாமக்கல், திருச்செங்கோடு கோட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கோரிக்கை குறித்து விளக்கினார். நேற்றும், காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில், புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வங்க வேண்டும் என்பது உள்பட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்