உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதியவர் பரிதாப பலி

முதியவர் பரிதாப பலி

பள்ளப்பட்டி, பள்ளப்பட்டியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட அரசு பஸ்சை, அரியலுார் மாவட்டம், நாச்சியார் பேட்டையை சேர்ந்த டிரைவர் முருகானந்தம் ஓட்டினார். பஸ், ரங்கராஜ் நகர் காஸ் குடோன் பிரிவு அருகே சென்றபோது, எதிரே வந்த டூவீலர் பஸ்சில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டூவீலரில் வந்த அரவக்குறிச்சி, முதலியார் தெருவை சேர்ந்த சுப்பிரமணி, 60, என்பவர் படுகாயமடைந்தார். ஹெல்மெட் அணியாததால், தலையில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியை மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்