உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

கரூர்: கரூர் மார்க்கெட்டிற்கு திருப்பூர், பல்லடம், பழனி, தாராபுரம் ஆகிய பகுதிகளில் தினந்-தோறும் விற்பனைக்கு தக்காளி கொண்டுவரப்ப-டுகிறது. இங்கிருந்த மாவட்டத்தில் உள்ள பிற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் மழை காரணமாக விளைச்சல் குறைந்ததால், தாக்காளி விலை இரண்டு மடங்கு அதிகரித்திருந்தது. இதுபோல மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது, தக்-காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை பாதி-யாக குறைந்து வருகிறது.இதுகுறித்து, தக்காளி வியாபாரிகள் கூறியதா-வது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவி-ரமடைந்த நிலையில் தக்காளி மட்டுமின்றி அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரிக்க துவங்கி உள்ளது. தினமும், 30 டன் தக்காளி வரத்து தேவை என்ற நிலையில், கடந்த வாரம், 15 டன்னுக்கு குறைவாக வரத்து இருந்தது. இதனால், கிலோ, 70 முதல், 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது மழை குறைந்து வரத்து ஓரளவு சீரானதால் விலை பாதி குறைந்து, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை