கரூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல்; இரண்டு பேர் கைது
கரூர்: கரூரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த, இருவர் கைது செய்யப்பட்டனர்.கரூர் பிரம்ம தீர்த்தம் சாலையில். கோட்டைமேடு மாநகராட்சி பள்ளி அருகில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டவுன் போலீஸ் எஸ்.ஐ.. மாரிமுத்து தலைமையில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கரூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி, 55, பசுபதிபாளையத்தை சேர்ந்த கார்த்தி, 38, ஆகியோர் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் போது பிடிபட்டனர். அவர்களிடமிருந்து, 9,502 ரூபாய் மதிப்புள்ள, 9.50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இருவரும் கைது செய்யப்பட்டனர்.