உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஒன்றிய செய்திகள் - கரூர்

ஒன்றிய செய்திகள் - கரூர்

இருப்பு பாதையில் நடந்துசெல்லும் பயணிகள்கரூர் ரயில்வே ஸ்டேஷன் வழியாக நாள்தோறும், 40க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் உள்ள, பிளாட்பாரங்களுக்கு செல்ல நடைமேம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பயணிகள் மேம்பாலத்தில் செல்லாமல், ரயில்வே இருப்பு பாதையில் இறங்கி, ஆபத்தான நிலையில் அடுத்தடுத்து உள்ள பிளாட்பாரங்களுக்கு நடந்து செல்கின்றனர். இதை போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, விபத்து ஏற்படும் முன்னர், இருப்பு பாதை வழியாக பயணிகள் செல்ல தடை விதித்து, நடை மேம்பாலம் வழியாக செல்ல அறிவுறுத்த வேண்டும்.போர்வெல் குழாயை சீரமைக்கமக்கள் வேண்டுகோள்கரூர் ஐயப்பா சேவா சங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மாநகராட்சி சார்பில், போர்வெல் குழாய் அமைக்கப்பட்டது. தற்போது, போர்வெல் குழாய் பழுதடைந்துள்ளது. அதில், பொதுமக்களால் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. அந்த போர்வெல்லை கரூர் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல் உள்ளது. கரூர் நகரில் மழை காரணமாக, நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. இதனால், போர்வெல் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நொய்யல் குறுக்கு பிரிவு சாலையில்பஸ்கள் நின்று செல்ல கோரிக்கைநொய்யல் குறுக்கு பிரிவு சாலையில் நிழற்கூடம் உள்ளது. இதன் அருகே பஸ்கள் நிற்பதில்லை. ஈரோடு - கரூர் நெடுஞ்சாலை ஓரத்தில் பஸ்கள் நின்று செல்வதால், அங்கு சென்று பொதுமக்கள் ஏறி பயணம் செல்கின்றனர். இதனால், காலியாக உள்ள நிழற்கூடத்தில் குடிமகன்கள் அமர்ந்து, மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக இப்பகுதி காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பயணிகள் நிழற்கூடம் அருகே அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.பதிவு செய்யாத நிதி நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைபதிவு செய்யாமல் இயங்கும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் கடவூர், தரகம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில், பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருகின்றன. இவை மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோன்ற நிறுவனங்களை நம்பி மக்கள் பணத்தை கட்டி ஏமாறுகின்றனர். சட்டத்திற்கு புறமாக செயல்படும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை