| ADDED : டிச 28, 2025 08:13 AM
கரூர்: மார்கழி மாதம், பெருமாள் கோவில்களில், பகல் பத்து, ராப்பத்து உற்சவத்துடன் வைகுண்ட ஏகா-தசி விழா நடக்கிறது. குறிப்பாக, நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பரமபத வாசல் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பா-லிப்பது வழக்கம்.இதன்படி, கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம் நடக்கிறது. வரும், 30 அதிகாலை 4:00 மணிக்கு மேல், 4:30 மணிக்குள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கி-றது.இதற்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்று சுவாமி தரிசனம் செய்வர். கோவில் நிர்வாகம் சார்பில், பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்-பட்டு வருகிறது. அதில், பரமபத வாயில் கதவு-களை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. பரமபத வாயில் புதுக்கப்பட்டு, விழா பந்தல் அமைத்தல் உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு-கிறது.