மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு பாராட்டு..
26-Jun-2025
கரூர், கரூர் உப்பிடமங்கலத்தில், வீரபத்திர ராஜகுல பேரவையின் முப்பெரும் விழா நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். இப்பேரவையின் நிறுவன தலைவர் வசந்தன் கலந்துகொண்டார். விழாவில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பின், மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உள்ள நிலையில், சரியாக கணக்கெடுக்க வசதியாக தமிழகம் முழுவதும் சென்று சமுதாய மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஐந்து சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், வீரபத்திர ராஜகுலத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நிர்வாகிகள் சுரேஷ், காளியப்பன், மேனா குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
26-Jun-2025