பெ.ஆ.கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து சரிவு
கரூர்: கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்ப-ணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமரா-வதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே, பெரிய ஆண்டாங்-கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து வினா-டிக்கு, 243 கன அடியில் இருந்து, நேற்று காலை, 185 கன அடியாக குறைந்தது.மாயனுார் கதவணைகரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம், 15,748 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 16,644 கன அடியாக அதிகரித்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், சாகுபடிக்காக காவிரியாற்றில், 15,274 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 600 கன அடி தண்ணீரும், கீழ் கட்-டளை வாய்க்காலில், 350 கன அடி தண்ணீரும், புதிய கட்டளை வாய்க்காலில், 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.ஆத்துப்பாளையம் அணைக.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணையில், நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 12.25 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் பாசன வாய்க்-காலில் வினாடிக்கு, 100 கன அடி தண்ணீர் திறக்-கப்பட்டது.