உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் பரவலாக மழை பொழிவு

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் பரவலாக மழை பொழிவு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வரகூர், சரவணபுரம், குழந்தைப்பட்டி, சிவாயம், பாப்பகாப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது. இதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு, சோளம் ஆகிய பயிர்களுக்கு மழை நீர் கிடைத்துள்ளது. மேலும் மானாவாரி நிலங்களில் பசும்புல் தீவனம் வளர்ந்து வருகிறது. இதன் மூலம் கிராமப்புறங்களில் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்கு ஓரளவு தீவன பற்றாக்குறை நீங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், மானாவாரி நிலங்களில் கோடை உழவு பணிகள் நடக்கும் என, விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி