உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனூர் அணை பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மாயனூர் அணை பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கரூர்;கரூர் மாயனுார் அருகில் கட்டளை கதவணையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பூங்கா சரிவர பராமரிப்பின்றி காணப்படுகிறது. இங்குள்ள, சிலைகள், சிறுவர் விளையாட்டு உபகரணம் முற்றிலும் சேதமடைந்துள்ளன.மேலும், பூங்கா முழுவதும் குப்பை குவிந்தும், ஆங்காங்கே சிதறியும் கிடக்கிறது. குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் உள்ளது. விடுமுறை நாள்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், சுகாதார கேடும், தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, மாயனுார் அணை பூங்காவை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை