உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விமான நிலைய பயணிகள் சேவை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

விமான நிலைய பயணிகள் சேவை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கரூர், தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு, விமான நிலைய பயணிகள் சேவை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு தாட்கோ நிறுவனமானது, ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு, சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலமாக கேபின் க்ரூவ், விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி, பயணியர் சேவை, பயணச்சீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி, சுற்றுலா போக்குவரத்து அடிப்படை பயிற்சி போன்றவைகளை அளிக்கிறது. பயிற்சியில், 18 முதல் 23 வயது நிரம்பி பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டிற்கு, 3 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். பயிற்சி முடித்தால் தனியார் விமான நிறுவனங்கள், சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். இதற்கு, www.tahdco.comஎன்ற தாட்கோ இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ