| ADDED : டிச 28, 2025 09:29 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த கழுகூர் பஞ்., பகுதியில், 7 வயது சிறுமி நேற்று மாலை, 4:00 மணியளவில் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்-தது. அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர், சிறுமியிடம் நைசாக பேசி பைக்கில் அழைத்து சென்றதாக தெரிகிறது. சிறுமி காணா-ததால் அவரது பெற்றோரும், ஊர் மக்களும் பல்-வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.இந்நிலையில், சிறுமியை கடத்திய வாலிபர் சிறிது நேரத்தில் மீண்டும், அதே பகுதியில் விடு-வதற்காக வந்தார். அப்போது அவரை பிடித்து வைத்த மக்கள், தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வாலிப-ரிடம் விசாரணை செய்தனர். அப்போது சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்றதும், பின்னர் கொண்டு வந்து விட்டதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக கழுகூர் மாகாளிபட்டியை சேர்ந்த சரவணன், 23, என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என, எஸ்.வளையப்பட்டி, ராக்கம்பட்டி, சங்காயி-பட்டி பகுதி மக்கள் குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலையில் தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார், தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், எஸ்.ஐ., பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேச்சு-வார்த்தை நடத்தினர்.அப்போது, விரைவில் டாஸ்மாக் கடை மூடப்-படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதை-யடுத்து மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்-டனர்.