உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆட்டிறைச்சி கூடம் திறக்க மக்கள் எதிர்ப்பு தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை

ஆட்டிறைச்சி கூடம் திறக்க மக்கள் எதிர்ப்பு தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை குப்பை மேட்டு தெருவில், 23 லட்சம் ரூபாய் மதிப்பில், நகராட்சி சார்பில் கட்டப்பட்ட நவீன ஆட்டிறைச்சி கூடம் திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து, தாசில்தார் தலைமையில், பேச்சுவார்த்தை நடந்தது. கிருஷ்ணகிரி நகராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட குப்பை மேட்டு தெருவில், 2007ம் ஆண்டு, 23 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன ஆட்டிறைச்சி கூடம் கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் முடிந்து, இந்த கூடத்தை கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில், அப்போதைய தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து, நகராட்சி அதிகாரிகள் அங்கு ஆட்டிறைச்சியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதியில் மக்கள் ஆட்டிறைச்சி கூடம் திறந்தால், சுகாதாரம் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும் என்று கூறி, அப்பகுதி மக்கள் ஆட்டிறைச்சி கூடத்தை திறக்க விடாமல் தடுத்து விட்டனர். இது குறித்து, 'காலைக்கதிரில்' ஃபோட்டோ வெளியிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, கலெக்டர் மகேஸ்வரன் ஆட்டிறைச்சி கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு, நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவுபடி நேற்று, கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் தங்கவேல் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. நகராட்சி தலைவர் பரிதா நவாப், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம், ஆர்.ஐ., முபாரக், துணை தாசில்தார் ஜெயகுமார், ஆர்.ஐ., சாம்ராஜ், கவுன்சிலர்கள் ரமேஷ், சாந்தி, ஊர்கவுண்டர் பட்டு, வெங்கடேஷ், விநாயகம், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அதிகாரிகள் கூறிய கருத்துக்களை பொதுமக்கள் ஏற்க மறுத்தனர். இதனால், கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை