உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2 இடங்களில் சாலை விபத்து டிரைவர் உட்பட 2 பேர் பலி

2 இடங்களில் சாலை விபத்து டிரைவர் உட்பட 2 பேர் பலி

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, புளியாண்டப்பட்டியை சேர்ந்தவர் தமிழ-ரசு, 34, பிக்கப் வாகன டிரைவர்; இவரின் தம்பி விக்னேஷ், 32; இருவரும் கடந்த, 29 ல் போச்சம்பள்ளியிலிருந்து வீட்டிற்கு பல்சர் பைக்கில், மூக்கம்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது மேக்லாம்பட்டியை சேர்ந்த மீனா, 32, என்பவர் ஸ்கூட்டி மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்-போது இரு வாகனமும் மோதியதில் தமிழரசு தலையில் படுகாய-மடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.* தர்மபுரி, ராஜாஜி நகரை சேர்ந்தவர் ராம்குமார், 39, தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் சென்றுள்ளார். காலை, 11:45 மணியளவில் குருபரப்-பள்ளி அருகே சென்றபோது, முன்னால் சென்ற டிப்பர் லாரி திடீ-ரென பிரேக் பிடித்து நின்றது. அப்போது பைக், டிப்பர் லாரி மீது மோதி ராம்குமார் பலியானார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை