உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் விற்ற 26 கடைக்கு சீல்

புகையிலை பொருட்கள் விற்ற 26 கடைக்கு சீல்

ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற, 26 கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. ஊத்தங்கரை டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து, ஊத்தங்கரையில் ஆறு கடைகள், கல்லாவியில் 8, சிங்காரப்பேட்டை, 9, மத்துார், 2, சாமல்பட்டியில், 1 கடை என மொத்தம், 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் முத்துக்குமார், முத்து மாரியப்பன், ராஜசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஊத்தங்கரை கந்தவேல், சிங்காரப்பேட்டை சந்திரகுமார், மத்துார் பாலமுருகன், கல்லாவி எஸ்.ஐ., அன்பழகன், ஊத்தங்கரை எஸ்.ஐ., கணேஷ்பாபு மற்றும் போலீசார் சீல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை