உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ம.ஐ., வேட்பாளர் மீது தாக்குதல் நாம் தமிழர் கட்சியினர் மீது புகார்

பா.ம.ஐ., வேட்பாளர் மீது தாக்குதல் நாம் தமிழர் கட்சியினர் மீது புகார்

கிருஷ்ணகிரி:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த எச்சனஹள்ளியை சேர்ந்தவர் ஆறுமுகம், 51. இவர், திராவிட தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில், திராவிட தெலுங்கு தேசம் கட்சி, 'பாரதிய மக்கள் ஐக்கியதா' கட்சியுடன் இணைந்து, தமிழகத்தில், 13 இடங்களில் போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு, நாம் தமிழர் கட்சியின் முந்தைய சின்னமான கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னை, நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தாக்கியதாக புகார் அளித்துள்ள, பாரதிய மக்கள் ஐக்கியதா கட்சி வேட்பாளர் ஆறுமுகம் கூறியதாவது:நான் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததில் இருந்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்னை கண்காணித்து வந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனைக்கு வந்தபோது அவர்கள் என்னை பின் தொடர்ந்தனர். இதையறிந்த நான் என் நண்பரின் பொலிரோ காரில், ஓசூர் நோக்கி சென்றேன். கிருஷ்ணகிரியிலிருந்து, 5 கி.மீ., துாரத்திலுள்ள கும்மனுார் அருகே சென்றபோது, 10க்கும் மேற்பட்ட டூவீலர்களில் வந்த நாம் தமிழர் கட்சியினர், எங்கள் காரை வழிமறித்து, என்னையும் என்னுடன் இருந்தவர்களையும் கடுமையாக தாக்கினர். மேலும் விவசாயி சின்னத்தில், நீ போட்டியிட கூடாது. நாளைக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் கொன்று விடுவோம் என மிரட்டினர்.இவ்வாறு, அவர் கூறினார்.படுகாயமடைந்த ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை