உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிராவல்ஸ் பஸ் மோதல் காரில் சென்ற தம்பதி பலி

டிராவல்ஸ் பஸ் மோதல் காரில் சென்ற தம்பதி பலி

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில், கார் மீது டிராவல்ஸ் பஸ் மோதிய விபத்தில், காரில் பயணித்த கர்நாடகாவை சேர்ந்த தம்பதி பலியாகினர்.கர்நாடக மாநிலம், பெங்களூரு வர்த்துாரை சேர்ந்தவர் சஜ்னையா, 58, சிவில் இன்ஜினியர்; இவர் மனைவி குமணா, 52; நேற்று முன்தினம் ஹூண்டாய் வெனியூ காரில், தர்மபுரி நோக்கி வந்துள்ளனர். நள்ளிரவு, 12:10 மணியளவில், கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி கூட்ரோடு அருகே, கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த டிராவல்ஸ் பஸ், கார் மீது மோதியது. இதில், சஜ்னையா, குமணா ஆகிய இருவரும் கார் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., டேம் போலீசார், இருவரது சடலங்களையும் மீட்டு, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை