| ADDED : ஜூலை 06, 2024 06:41 AM
ஓசூர் : ஓசூர் அருகே, 2 ரூபாய் நாணயத்தை விழுங்கிய மாணவிக்கு மூச்-சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்றினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுாரை சேர்ந்தவர், 6 வயது சிறுமி; அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்; கடந்த, 3ம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த மாணவி, 2 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விழுங்கினார். இதனால் மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனு-மதித்தனர். அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் சிவா, வேதா ஆகியோர், மாணவிக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்து பார்த்த போது, நாணயம் மூச்சுக்குழாய் மற்றும் உணவு குழல் சந்திக்கும் இடத்தில் சிக்கியிருப்பது தெரிந்தது.மாணவி ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த டாக்டர் குழுவினர், உடனடியாக நவீன கத்திட்டர் உள்நோக்கு சிகிச்சை கருவி உதவியுடன், நாணயத்தை மூச்சுக்குழலில் இருந்து அகற்றி, மாணவியின் உயிரை காப்பாற்றினர். மாணவி தற்போது நலமுடன் உள்ளார். டாக்டர்கள் குழுவினரை, மருத்துவ கல்லுாரி மருத்துவ இயக்குனர் ராஜா முத்தையா, மருத்-துவ கண்காணிப்பாளர் வாசுதேவா மற்றும் மற்ற டாக்டர்கள் பாராட்டினர்.