உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

ஓசூர், : ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க, அனைத்துத்துறை ஓய்வூ-தியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க, ஓசூர் வட்ட பேரவை கூட்டம், ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்-பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.வட்ட தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். இணை செய-லாளர் நஞ்சுண்டரெட்டி வரவேற்றார். துணைத்தலைவர் தேப்-பய்யா முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சரவணபவன், கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். வட்ட செயலாளர் சந்திர-சேகரன் அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் துரை, கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.கூட்டத்தில், தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். 70 வயது கடந்த அனைத்து ஓய்வூதியர்க-ளுக்கும், கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாயை, சத்துணவு, அங்-கன்வாடி, பட்டு வளர்ச்சித்துறை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.ஓசூர் அரசு மருத்துவமனை அருகில், பெண்கள், முதியவர்க-ளுக்கு வசதியாக, கழிவறை கட்டி கொடுக்க வேண்டும். காப்பீடு திட்ட குளறுபடிகளை நீக்க வேண்டும். ஓசூரை தனி மாவட்ட-மாக அறிவிக்க வேண்டும்.மண்டல தலைவர் சீனிவாசலு, மாவட்ட துணைத்தலைவர் வெங்-கடேசன், பொருளாளர் ரவிச்சந்திரன், இணை செயலாளர் ராஜா-மணி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் முன்னதாக, சங்க உறுப்பினர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை