உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஓசூர்: ராயக்கோட்டை அருகே எச்சனஹள்ளி, ஒடையாண்டஹள்ளி, போடம்பட்டி, குரும்பட்டி, ஏரி சின்னகானம்பட்டி ஆகிய, 5 கிராமங்களுக்கு நடுவே, ஓபிலி மண்டில் அமைந்துள்ள மண்டு மாரியம்மன் கோவில் பொதுமக்கள் பங்களிப்புடன் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜை, ஹோமம் நடக்கிறது.பெண்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். நேற்று அதிகாலை பசவய்யர் தலைமையில், வேத மந்திரங்கள் ஓதி அம்மனுக்கு பஞ்சலோக நவரத்தினம் சிவசக்கரங்கள் கொண்டு அஷ்டபந்தன பிரதிஷ்டை நடந்தது. தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ