உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எம்.சி.,பள்ளி வீரபத்ரசுவாமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

எம்.சி.,பள்ளி வீரபத்ரசுவாமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த, எம்.சி., பள்ளி வீராபத்ரசுவாமி கோவிலில், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, 11 கிராமங்கள் சேர்ந்து திருவிழா நடத்துவர். விசேஷமான நாட்களில் இக்கோவில்களில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் ஆடிப்பெருக்கையொட்டி நேற்று எம்.சி., பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர், வீரபத்ரசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களில், 300க்கும் மேற்பட்டோர், தங்கள் தலைகளில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.அதேபோல, பர்கூர் அடுத்த ஜிஞ்சும்பட்டி பாலமுருகன் கோவில், பர்கூர் சலவதன மலையின், 250 அடி உச்சியிலுள்ள முனீஸ்வரன் கோவில்களில் ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை