உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சரக வாலிபால் போட்டி ஆர்.வி., அரசு பள்ளி முதலிடம்

சரக வாலிபால் போட்டி ஆர்.வி., அரசு பள்ளி முதலிடம்

சரக வாலிபால் போட்டிஆர்.வி., அரசு பள்ளி முதலிடம்ஓசூர், ஆக. 23-ஓசூர் சரக அளவில், 17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான வாலிபால் விளையாட்டு போட்டிகள், அதியமான் பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. இதில், ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், முல்லை நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 2ம் இடமும் பெற்றன. 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 2ம் இடமும் பெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணி, கிருஷ்ணகிரி வருவாய் கல்வி மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. முதலிடம் பெற்ற ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேஷ், வாலிபால் பயிற்சியாளர் தாயுமானவன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை