கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் கடந்த, 159 நாட்களுக்கு பிறகு நேற்று, 50 அடியை எட்டியது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு இறுதியில், 4 மாதங்கள் பரவலாக மழையால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வ-ரத்து இருந்தது. கடந்தாண்டு ஜூன், 4 முதல் இந்தாண்டு பிப்., 6 வரை தொடர்ந்து, 248 நாட்கள், 50 அடிக்கு மேல் அணையில் நீர் இருப்பு இருந்தது. பின் மழையின்றி பிப்., 7ல், 49.95 அடியாக நீர்-மட்டம் சரிந்தது. அதன்பிறகு பருவமழை பொய்த்து நீர்வரத்து குறைந்து, அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது. கடந்த, 2 மாதமாக மாவட்டத்தில் அவ்வப்போது லேசான மழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிக-ரித்து, நீர்மட்டம் மொத்தமுள்ள, 44.28 அடியில், 42.31 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து கடந்த, 4 முதல் வினாடிக்கு, 400 கன நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த, 10 நாட்களுக்கு மேல், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்தால் நீர்-மட்டம், 159 நாட்களுக்கு பிறகு நேற்று, 50 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு, 305 கன அடி நீர்வரத்து உள்ளது. அணை-யிலிருந்து பாசனத்திற்கு இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில், 185 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தாலும், அணை நீர்மட்டம், 51 அடியை தாண்டி-னாலும், ஆற்றங்கரையோர, 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என, பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.