மேலும் செய்திகள்
சாலைப்பணியாளர் சங்கம் போராட்டம்
23-Dec-2025
மாணவ, மாணவியருக்கு இலவச காலணி வழங்கல்
23-Dec-2025
ஓசூரில் துாய்மை பணி
23-Dec-2025
பெண் உட்பட இருவர் மாயம்
23-Dec-2025
ஓசூர்: தளி அருகே, விவசாயிகளின் கறவை மாடுகளை மர்ம நபர்கள் இருவர் திருட முயன்றனர். பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் தப்பி சென்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கொடகாரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திராரெட்டி, 40, விவசாயி; இவருக்கு சொந்தமான, மூன்று கறவை மாடுகளை மர்ம நபர்கள் இருவர் நேற்று முன்தினம் இரவு, பிக்கப் வாகனத்தில் திருடி கொண்டு சாரகப்பள்ளி கிராமத்திற்கு சென்றனர். அங்கு விவசாயி பாபு, 40, என்பவரது கறவை மாட்டை திருடி கொண்டு தப்பி செல்ல முயன்றனர். அந்த நேரத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, பாபு வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அங்கு மாட்டை மர்ம நபர்கள் திருடி செல்ல முயற்சிப்பதை கவனித்த அவர், தனது பொலிரோ வாகனத்தில் பிக்கப் வாகனத்தை துரத்தி சென்றார்.மேலும், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த மக்களுக்கும் மாடுகளை திருடி செல்லும் தகவலை தெரிவித்தார். ஒரு கட்டத்தில், வேறு வழியின்றி பிக்கப் வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு, மர்ம நபர்கள் இருவரும் தப்பியோடினர். மாடுகளை பொதுமக்கள் மீட்டனர். தளி போலீசார் பிக்கப் வாகனத்தை பறிமுதல் செய்து, பதிவு எண்ணை வைத்து விசாரித்த போது, கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்பேட்டை பகுதியை காட்டியது. இதற்கிடையே, தப்பியோடிய மர்ம நபர்கள் இருவரும், மதகொண்டப்பள்ளியை சேர்ந்த வீரபத்திரப்பா, 46, என்பவரது பல்சர் பைக்கை திருடி கொண்டு தப்பி சென்றனர்.தளி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
23-Dec-2025
23-Dec-2025
23-Dec-2025
23-Dec-2025