உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இ.கம்யூ., வட்டக்குழு கூட்டம்

இ.கம்யூ., வட்டக்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மல்லப்பாடியில், இ.கம்யூ., வட்டக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் மோகன் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க, மாவட்ட தலைவர் கண்ணு முன்னிலை வகித்தார். விவசாய சங்க மாநில துணைத்தலைவர் லகுமைய்யா, அரசியல் சூழ்நிலை குறித்து விளக்கினார். கூட்டத்தில், ஜூலை மாத இறுதியில் தாசில்தார் அலுவலகம் முன் பட்டா கேட்டு போராட்டம் நடத்த வேண்டும். சாலையோரங்களில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பர்கூர் ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும். பர்கூரில் நீதிமன்றம் அமைக்க வேண்டும். விவசாயிகள் நில அளவையருக்கு பணம் செலுத்தி பல மாதம் ஆகியும், நிலத்தை அளக்காமல் இருப்பதை கண்டிப்பதுடன், உடனடியாக நிலத்தை அளக்க வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் உடனடியாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச்செயலாளர் ராமமூர்த்தி, வட்ட செயலாளர் வெங்கடேஷ், வட்டக்குழு உறுப்பினர்கள் கமலேஷ், முனிசாமி, கல்பனா, பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை