மேலும் செய்திகள்
குழந்தை கழுத்தில் கிடந்த நகையை திருடிய பெண் கைது
28-Dec-2025
மண் கடத்திய லாரி பறிமுதல் கிருஷ்ணகிரி:
28-Dec-2025
சாலை பணிக்கு பூமி பூஜை
28-Dec-2025
கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
28-Dec-2025
ஓசூர், தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் வரும், 2031 ம் ஆண்டுக்குள், 33 சதவீத பசுமை பரப்பை உறுதி செய்யும் முன்னோடி திட்டங்களில் ஒன்றாக, மரகத பூஞ்சோலை திட்டம் துவங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், நெல்லுமார் கிராமம் அருகே, வனத்துறை மூலம், 2.50 ஏக்கர் பரப்பளவில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், மரகத பூஞ்சோலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம், 625 க்கும் மேற்பட்ட பல வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதற்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மக்கள் நடந்து செல்ல நடைபாதை, பார்வையாளர் கூடம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மரகத பூஞ்சோலையை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், சென்னையிலிருந்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் சரயு, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி ஆகியோர், மரக்கன்றுகளை நட்டு வைத்து, மரகத பூஞ்சோலையை சுற்றிப்பார்த்தனர்.
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025