உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மருமகனை கடத்திய மாமனார் நான்கு பேர் கும்பல் கைது

மருமகனை கடத்திய மாமனார் நான்கு பேர் கும்பல் கைது

மருமகனை கடத்திய மாமனார்நான்கு பேர் கும்பல் கைதுஓசூர், ஆக. 22-கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த நல்ராலப்பள்ளி காலனி தெருவை சேர்ந்தவர் நாகராஜ், 30, பெயின்டர்; கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அருகே பண்டாபுராவை சேர்ந்த ஆனந்த், 43, என்பவரின் மகள் வர்ஷாவை காதலித்து, 2வது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நாகராஜிடமிருந்து அவரது மாமனார் ஆனந்த், 80,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதை திரும்ப கொடுக்காததால், நாகராஜ், அவர் மனைவி வர்ஷா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக, நாகராஜ் மற்றும் மாமனார் ஆனந்த் இடையே மொபைல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு வீட்டிற்கு வெளியே நின்றிருந்த நாகராஜை, ஒரு கும்பல் ஈகோ காரில் கடத்தி, கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தது. பின், கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அருகே பண்டாபுரா தனியார் லேஅவுட் அருகே, இறங்கிவிட்டு தப்பியது.நேற்று ஊருக்கு வந்த நாகராஜ் ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்படி, பண்டாபுராவை சேர்ந்த தனியார் கல்லுாரி பி.ஏ., முதலாமாண்டு மாணவர் மஞ்சுநாத், 21, முரளி, 33, ஆஞ்சனப்பா, 41, சஞ்சய், 23, ஆகிய, 4 பேரை போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். தலைமறைவான ஆனந்தை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை