உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.1.50 லட்சம் நிவாரண பொருட்கள் வயநாட்டிற்கு அனுப்பிய வனத்துறை

ரூ.1.50 லட்சம் நிவாரண பொருட்கள் வயநாட்டிற்கு அனுப்பிய வனத்துறை

ஓசூர், கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் சிக்கி, நுாற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். பலர் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி முயற்சியால், வனத்துறை ஊழியர்கள் மூலம், நிதியுதவி பெறப்பட்டு, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பெட்சீட், பாய், பிளாஸ்டிக் பக்கெட், கப், நேப்கின், பிளாஸ்க், துண்டு, சோப்பு, செருப்பு போன்ற பல்வேறு வகையான பொருட்கள் வாங்கப்பட்டன. அவற்றை லாரியில் ஏற்றி, நேற்று முன்தினம் இரவு, ஓசூர் மத்திகிரியிலுள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இருந்து, வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. வனவர் ரமேஷ் மற்றும் வன ஊழியர்கள் உடன் சென்றனர். ஏற்பாடுகளை, ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்