உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கள்ளக்காதலி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த அரசு பஸ் கண்டக்டர் கைது

கள்ளக்காதலி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த அரசு பஸ் கண்டக்டர் கைது

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, லைன் கொள்ளை அருகில் நேற்று, 40 வயது மதிக்கத்தக்க பெண், உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அவரை மீட்டு விசாரித்தனர். அப்பெண் கிருஷ்ணகிரி லைன்கொள்ளையை சேர்ந்த லட்சுமி என்பதும், அவர் மீது, பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தது, அவரது கள்ளக்காதலன் மாதவன் என்பதும் தெரிந்தது.போலீசார் கூறியதாவது:கிருஷ்ணகிரி, பாத்திமா நகரை சேர்ந்தவர் மாதவன், 45, அரசு பஸ் கண்டக்டர். இவருக்கு கிருஷ்ணகிரி லைன்கொள்ளையை சேர்ந்த லட்சுமி, 40, என்பவருடன் 10 ஆண்டுகளுக்கு மேல் கள்ளத்தொடர்பு இருந்தது. லட்சுமியின் போக்கில் மாதவனுக்கு 6 மாதங்களாக சந்தேகம் ஏற்பட்டது. மேலும் லட்சுமி பல ஆண்களுடன் தனிமையில் இருந்ததும் தெரிந்தது.இதனால் மனமுடைந்த மாதவன், அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு, லட்சுமியை தனிமையில் இருக்க அழைத்தார். அதை நம்பி வந்த லட்சுமி உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துார். மாதவனை கைது செய்துள்ளோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை