உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கர்நாடகா மது கடத்திய இரண்டு பேருக்கு காப்பு

கர்நாடகா மது கடத்திய இரண்டு பேருக்கு காப்பு

ஓசூர், ஓசூர் மதுவிலக்கு போலீசார், பாரந்துார் சாலையில் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, 240 கர்நாடகா மதுபான பாக்கெட்டுகள் இருந்தன. காரை ஓட்டி வந்த பாரந்துாரை சேர்ந்த முருகேஷ், 33, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 27,000 ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.* ஓசூர் மத்திகிரி ஸ்டேஷன் போலீசார், பூனப்பள்ளி சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து வந்த ஹோண்டா ஆக்டிவா மொபட்டை சோதனை செய்தனர். இதில்,12,900 ரூபாய் மதிப்புள்ள, 144 பாக்கெட் கர்நாடகா மதுபானம் இருந்தது. மொபட்டை ஓட்டி வந்த கெலமங்கலம் ஜி.பி., காலனியை சேர்ந்த மஞ்சுநாத், 36, என்பவரை கைது செய்த போலீசார், மதுபானம் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ