உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குப்பை மேடாகும் ஏரிக்கரைகள்: துர்நாற்றத்துடன் கடக்கும் ஓட்டுனர்கள்

குப்பை மேடாகும் ஏரிக்கரைகள்: துர்நாற்றத்துடன் கடக்கும் ஓட்டுனர்கள்

கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி, ஆவின் மேம்பாலம் அருகில், தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம் தேவசமுத்திரம் ஏரி உள்ளது. ஏரி நீரால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. நாளடைவில் மக்கள் தொகை அதிகரிப்பு, சாக்கடை கால்வாய் இல்லாததால், கழிவுநீர் சேரும் ஏரியாக மாறியது. 2009ல் கிருஷ்ணகிரி நகராட்சி பாதாள சாக்கடை திட்டமும், அதன்பின் இந்த ஏரி அருகிலேயே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் கட்டப்பட்டு, கழிவு நீரை சுத்திகரித்து தேவசமுத்திரம் ஏரிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.இருப்பினும் ஏரியை புனரமைக்க இது போதுமானதாக இல்லை. ஏரி அமைந்துள்ள இடம் நகராட்சி மற்றும் கட்டிகானப்பள்ளி, தேவசமுத்திரம், அகத்திப்பள்ளி பஞ்.,களின் எல்லைகளாக உள்ளது. இதனால், இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை யார் அள்ளுவது என்ற போட்டி நிலவுகிறது. குடியிருப்புகளின் மொத்த கழிவுகள், மருத்துவமனைகளின் கழிவுகள் வரை ஏரிக்கரையில் கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. டன் கணக்கிலான குப்பை, ஏரியில் மண்டியிருக்கும் ஆகாய தாமரைகளுடன் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விடுகின்றனர். இதனால் புகையை கடந்து வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.குப்பை சூழ்ந்துள்ள புதுார் ஏரி தேவசமுத்திரம் ஏரியை கடந்து, 200 மீட்டர் தொலைவில் உள்ள புதுார் ஏரியிலிருந்தும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஏரியை சுற்றிலும், தேசிய நெடுஞ்சாலையோரமும் குப்பை கொட்டப்பட்டுள்ளன. ஏரியில் சாக்கடை கழிவுகள் தேங்கி, 1 கி.மீ., சுற்றுவட்டத்திற்கு துர்நாற்றம் வீசுகிறது. ஆவின் மேம்பாலம் அருகில் உள்ள தேவசமுத்திரம் ஏரி முதல், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள புதுார் ஏரி வரை, கரைகளை சமன்படுத்தி தடுப்பு அமைக்க வேண்டும். தடுப்புகளுக்குள் புற்கள், மரங்களை நட்டு, ஏரியில் துாய்மை, புனரமைப்பு பணிகள் மேற்கொண்டால், துர்நாற்றம் வீசும் இந்த பகுதி, பொழுதுபோக்கு பூங்காவாக மாறும்.மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இதை உடனடியாக செய்ய வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை