உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேர்தல் விதிகளை மீறியதாக 5 வழக்குகள் போலீசார் பதிவு

தேர்தல் விதிகளை மீறியதாக 5 வழக்குகள் போலீசார் பதிவு

கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் அனுமதியின்றி சுவர் விளம்பரம், கொடிகம்பங்கள் அகற்றாதவர்கள் குறித்து, அந்தந்த பகுதி வி.ஏ.,ஓ.,க்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி கீழ்குப்பம் பஸ் ஸ்டாப்பில் கொடி கம்பத்தை அகற்றாத தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கட்சியினர், 4 ரோட்டில் கொடிகம்பங்களை அகற்றாத, அ.தி.மு.க.,வினர், வி.சி.கட்சியினர் மற்றும் சிங்காரப்பேட்டையில் அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதிய பா.ஜ.,வினர் உள்பட, 4 கட்சியினர் மீது, தேர்தல் விதிமீறல் வழக்கு பதிந்து ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.* சூளகிரி, மருதாண்டப்பள்ளியில் லோகேஷ் என்பவரது வீட்டு சுவற்றில், அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டிருந்தது. அப்பகுதியின், அ.தி.மு.க., உறுப்பினர் வெங்கடேஷ், 32, ஏற்பாட்டில் சின்னம் வரையப்பட்டது தெரிந்தது. அவர் மீது சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ