உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விதையின் தரத்தை அறிய பரிசோதனை அவசியம்

விதையின் தரத்தை அறிய பரிசோதனை அவசியம்

கிருஷ்ணகிரி;விதையின் தரத்தை அறிய, விதை பரிசோதனை அவசியம் என, கிருஷ்ணகிரி விதை விற்பனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தரமான விதை என்பது, முளைப்புத்திறன், புறத்துாய்மை, பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை குறிக்கும். இத்தர நிர்ணயங்கள் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும். தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க, நல்ல முளைப்புத்திறன் வேண்டும். இதனால், விதை செலவு குறையும். புறத்துாய்மை பரிசோதனையில், பிற பயிர் விதை மற்றும் களை விதை கலப்புகள் கண்டறியப்படுவதால், விதையின் இனத்துாய்மை மற்றும் புறத்துாய்மை காப்பாற்றப்படுகிறது. முளைப்புத்திறனை காக்க, ஈரப்பதத்தை தெரிந்து கொள்ளுதல் அவசியம். விதைகளை சேமிக்கும் போது, பூச்சி நோய் தாக்குதலால் முளைப்புத்திறன் கெடாமல், நீண்ட நாட்கள் சேமிக்க, விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக்கூடாது. இதற்கு விதை பரிசோதனை அவசியம்.விதை விற்பனையாளர்கள், தாங்கள் இருப்பு வைத்துள்ள விதையின் தரத்தை அறிய விதை மாதிரி எடுக்க வேண்டும். விதை உரிய விபரங்களுடன் ஒரு மாதிரிக்கு, 80 ரூபாய் என்ற விகிதத்தில் வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம், கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி, என்ற முகவரிக்கு அனுப்பி, தரத்தை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ