உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம் சோதனை முயற்சியாக ரயில் இயக்கம்

புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம் சோதனை முயற்சியாக ரயில் இயக்கம்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தேன்கனிக்கோட்டை சாலையில், ஆர்.சி., தேவாலயம் அருகே, சாலையின் குறுக்கே ரயில்வே லைன் செல்கிறது. இப்பகுதியில் உள்ள ரயில்வே பாலம் குறுகிய அளவில் உள்ளதால், அதன் அடியில் வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பழைய பாலத்தின் அருகே, புதிய ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆக., மாதம் துவங்கின. அதனால், அவ்வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.புதிய பாலம் கட்டப்பட்டு, அதன் மீது தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பாலம் வழியாக, நேற்று முன்தினம் மதியம் சோதனை முயற்சியாக, அவ்வழியாக வந்த குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் குறைந்த வேகத்தில் இயக்கி பார்க்கப்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து, ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் வரை, இருவழி ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. குறுகலான பழைய பாலத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் மற்றொரு புதிய ரயில்வே பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை