உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிராமத்தில் சுற்றித்திரிந்த யானை வீடுகளில் கிராம மக்கள் தஞ்சம்

கிராமத்தில் சுற்றித்திரிந்த யானை வீடுகளில் கிராம மக்கள் தஞ்சம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த மிலிதிக்கி கிராமத்தில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை நேற்று சுற்றித்திரிந்தது.உடல் மெலிந்து சோர்வாக காணப்பட்ட அந்த யானை, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியை சுற்றி வந்தது. இதனால், கிராம மக்கள் அச்சமடைந்து வீடுகளில் தஞ்சமடைந்தனர். பொதுமக்கள் சிலர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்த அஞ்செட்டி வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து, ஒற்றை யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.இதனால், கிராம மக்கள் நிம்மதியடைந்தனர். யானை மிகவும் சோர்வாக காணப்படுவதால், அதை கண்காணித்து என்ன பிரச்னை என்பதை வனத்துறையினர் கண்டறிய வேண்டும் என, விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ