உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொடரும் விபத்து, உயிர்பலியை தடுக்க அரசு மருத்துவக் கல்லுாரி முன் மேம்பாலம் அமைப்பது எப்போது?

தொடரும் விபத்து, உயிர்பலியை தடுக்க அரசு மருத்துவக் கல்லுாரி முன் மேம்பாலம் அமைப்பது எப்போது?

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி முன், மேம்பாலம் அமைக்க சர்வே முடிந்த நிலையில், மேம்பால கட்டுமான பணிகள் துவங்கவில்லை. இதனால், இப்பகுதியில் சாலையை மக்கள் கடக்க முயலும் போது விபத்துகள் மற்றும் உயிர்பலிகள் தொடர்கின்றன.கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளி, கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு நாள்தோறும், 2,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். அதே போல், அரசு மருத்துவக் கல்லுாரி மாணவ, மாணவியர், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட, 1,000க்கும் அதிகமானவர்கள் வந்து செல்கின்றனர்.மேம்பாலம் அமைக்க ஒப்பந்தம்தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன், மேம்பாலம் அமைக்க, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த, 2023 ஜன.,ல் தேசிய நெடுஞ்சாலைத்துறை, அரசு மருத்துவக் கல்லுாரி எதிரே, 750 மீட்டர் நீளத்திற்கு, 25.8 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்க ஒப்பந்தம் போட்டது. மேலும் மேம்பாலம் கட்டும் பணி, 565 நாட்களில் முடியும் எனவும் தெரிவித்தது.நிறுத்தப்பட்ட பணிகள்கடந்த, 2023, பிப்.,ல் அரசு மருத்துவக் கல்லுாரி எதிரே மேம்பாலம் அமையவுள்ள இடத்தை அளவீடு செய்யும் பணி நடந்தது. தொடர்ந்து, இப்பகுதியில் மேம்பாலம் அமைய உள்ள இடத்திற்கு பக்கவாட்டில், சர்வீஸ் சாலை போடும் பணியும் துவங்கிய சில மாதங்களில், நின்று விட்டன. மேம்பால பணிக்கு, 565 நாட்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஓராண்டு முடிந்த நிலையில் மீதமுள்ள நாட்களில் மேம்பாலம் கட்ட முடியாது. இது குறித்து அரசும், தேசிய நெடுஞ்சாலைத்துறையும், முறையான விளக்கத்தை அளிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விபத்தை தடுக்கஅரசு மருத்துவக் கல்லுாரிக்கு எதிரே மருத்துவமனைக்கு வருபவர்கள், அவசர அவசரமாக சாலையை கடக்கும்போது விபத்துகளும், உயிர்பலிகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இப்பகுதி சாலையில் இருபுறமும் பேரிகார்டு வைத்து, விபத்தை தடுக்கும் வகையில் போலீசாரை நிறுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் பல உயிர்பலி ஏற்பட்டுள்ள நிலையில், மேம்பால கட்டுமான பணிகளை, உடனடியாக துவங்க வேண்டும் எனவும், கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை