உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கம்பன் கழக 15ம் ஆண்டு விழா

கம்பன் கழக 15ம் ஆண்டு விழா

ஊத்தங்கரை: ஊத்தங்கரை கம்பன் கழக அறக்கட்டளையின், 15ம் ஆண்டு விழா, வீரியம் பட்டி கூட்ரோட்டில் நேற்று நடந்தது. கம்பன் கழக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயல் தலைவர் உமா ராஜேந்திரன் வரவேற்றார்.'இன்றைய சூழ்நிலையில், கம்பரின் கருத்துக்கள் பெரிதும் தேவைப்படுவது பெற்றோர்களுக்கா, பிள்ளைகளுக்கா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நகைச்சுவை நாவலர் ராம-லிங்கம் நடுவராக கலந்து கொண்டார். சஞ்சீவராயன் திலகவதி ஆகியோர், 'பெற்றோர்களுக்கே' என்ற தலைப்பிலும், சவுந்திர பாண்டியன், தாமரைக்கொடி ஆகியோர், 'பிள்ளைகளுக்கே' என்ற தலைப்பிலும் பேசினர். பள்ளி மாணவர்களுக்கு கம்பர் பற்றி பல்-வேறு கருத்துக்களை கூறி, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்-டது. நிகழ்ச்சியில், குமாரசாமி கண்ணன், அருணாச்சலம், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் வேங்கன், முன்னாள் சேர்மன் கிருஷ்ணன், சந்தானம் உள்ளிட்ட, 200க்கும் மேற்-பட்டோர் கலந்து கொண்டனர். கம்பன் கழக அறக்கட்டளை செய-லாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ