உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடிநீரின்றி 20 கிராம மக்கள் அவதி

குடிநீரின்றி 20 கிராம மக்கள் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பட்டுகோணாம்பட்டி ஊராட்சியில், 15 குக்கிராமங்கள் உள்ளன. இதில், 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதிகளவில் மலைவாழ் மக்கள் உள்ளனர். இவர்களுக்கு குடிக்க ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக, ஏ.பள்ளிபட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரை, 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்காக சாலையோரங்களில், பொக்லைன் மூலம் குழி தோண்டும்போது, ஒகேனக்கல் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால், பட்டுகோணாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, 15 கிராமங்களுக்கு கடந்த, 20 நாட்களாக ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.ஊராட்சி நிர்வாகம் உடைந்த குழாய்களை சரிசெய்தது. இருப்பினும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கும் அதிகாரிகள், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்ரோட்டிலுள்ள ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் நீரேற்று அறையில் இருந்து, ஒகேனக்கல் குடிநீர் வழங்காமல், நிறுத்தி வைத்துள்ளதால், பட்டுகோணாம்பட்டி, ஊராட்சி மட்டுமல்லாமல் மஞ்சவாடி, ஏ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, இருளப்பட்டி, பாப்பம்பாடி, புதுப்பட்டி, முக்காரெட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் குடிநீரின்றி கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ஒகேனக்கல் குடிநீர் தொடர்ந்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை