உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வட மாநிலத்தவர் மீது தாக்குதல் 25 பேர் மீது பாய்ந்தது வழக்கு

வட மாநிலத்தவர் மீது தாக்குதல் 25 பேர் மீது பாய்ந்தது வழக்கு

செம்படமுத்துார்:கிருஷ்ணகிரி அடுத்த செம்படமுத்துார் பஞ்.,ல், ஒரு பெண்ணிடமிருந்த குழந்தையை பறிக்க முயன்றதாக கூறி, வட மாநில வாலிபர்கள், 3 பேரை, அப்பகுதியை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்‍டோர் கடுமையாக தாக்கினர். இதுபோல, பெத்ததாளாப்பள்ளி பஞ்., மாதேப்பட்டி மற்றும் துறிஞ்சிப்பட்டி அருகே நடந்து சென்ற, வடமாநில வாலிபர்கள், இருவர் தாக்கப்பட்டனர். அந்த, ஐந்து பேரும் அசாம் மாநிலம், கவுகாத்தியை சேர்ந்தவர்கள் என்பதும், மூன்றாண்டுகளுக்கும் மேலாக, கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரம் பகுதியில் தங்கி, ஆட்டோவில் சென்று குப்பை கழிவு மற்றும் மது பாட்டில்களை சேகரித்து, பிழைப்பு நடத்தி வந்ததும் தெரிந்தது. அவர்களை, குழந்தைகளை கடத்துவதாக கூறி தாக்கிய, 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.இதுபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில், குழந்தை கடத்தல் நபர்கள் என கூறி, வட மாநிலத்தவரை தாக்கியதாக, அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை