உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 505 மது பாட்டில்கள் பறிமுதல்

505 மது பாட்டில்கள் பறிமுதல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த பழையூர் கிராமத்தில், கவுரி, 55, மற்றும் அவரது மகன் ரபி, 32, ஆகியோர், மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக, நேற்று முன்தினம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால், மது விற்பவர்கள் போலீசாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், போலீசார் வருவதை முன்கூட்டியே அவர்கள் அறிந்து தப்பினர். அதன்பின் அங்கு சென்ற போலீசார், 505 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வந்தனர். ஆனால், குற்றவாளிகளை கைது முயற்சி மேற்கொள்ளவில்லை. தேர்தல் ஓட்டுப்பதிவு நெருங்கும் நிலையில், தேன்கனிக்கோட்டை பகுதியில் கள்ள மதுபானம், சந்து கடைகள் விற்பனை மற்றும் கள்ளச்சாராய விற்பனை தாராளமாக நடக்கிறது. இதில் ஈடுபடும் நபர்கள் குறித்து, போலீசாருக்கு தெரிந்திருந்தும், கைது நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ