உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மது குடிக்க பணம் கேட்டு நண்பரை மிரட்டியவர் கைது

மது குடிக்க பணம் கேட்டு நண்பரை மிரட்டியவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள கனமுட்லுவை சேர்ந்தவர் சரவணன், 44. கிட்டம்பட்டியை சேர்ந்தவர் குமார், 33. இருவரும் நண்பர்கள். கடந்த, 27ல் குமார் கனகமுட்லுவில் உள்ள சரவணன் வீட்டிற்கு சென்று மது வாங்க பணம் கேட்டுள்ளார். அதற்கு சரவணன் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் குமார், சரவணனை கத்தி முனையில் மிரட்டி, 500 ரூபாயை பறித்துச் சென்றார். இது குறித்து சரவணன் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை