ஓட்டலில் கைவரிசைகாட்டியவருக்கு வலை
கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே தெடாவூரை சேர்ந்தவர் மாவீரன், 36. கெங்கவல்லி, 4 ரோட்டில், கீற்றுக்கொட்டகையில் பிரியாணி ஓட்டல் நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிச்சென்றார். நேற்று காலை திறக்க வந்தபோது, கீற்றுகள் சேதமாகியிருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது காஸ் சிலிண்டர் அடுப்பு, மிக்சி, எடை போடும் இயந்திரம், பரிமாற பயன்படுத்தும் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. மாவீரன் புகார்படி கெங்கவல்லி போலீசார், ஓட்டலில் திருடிய மர்ம நபர்களை தேடுகின்றனர்.