உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிராமத்தில் ஒற்றை யானை பொதுமக்கள் அலறி ஓட்டம்

கிராமத்தில் ஒற்றை யானை பொதுமக்கள் அலறி ஓட்டம்

ஓசூர : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. கூட்டத்தில் சேராத ஒற்றை ஆண் யானை, இரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, கிராமத்திற்குள் புகுந்து வருகிறது. சில நாட்களுக்கு முன், சினிகிரிப்பள்ளி அருகே முனிரத்னா, 35, என்ற பெண்ணை தாக்கி கொன்றது. நேற்று முன்தினம் இரவு, லக்கசந்திரம் கிராமத்திற்குள் புகுந்தது. இதைப்பார்த்த கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.விவசாய நிலங்களில் நீண்ட நேரம் முகாமிட்டு, பயிர்களை நாசம் செய்தது. கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், தாரை, தப்பட்டை அடித்தும் விரட்டியதால், நுகனுார் காப்புக்காட்டிற்குள் சென்று மறைந்தது.உயிர் பலியோடு, பயிர்களும் நாசமாகி வருவதால், ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி