உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையில் நடந்து சென்ற பெண் யானை துாக்கி வீசியதில் பலி

சாலையில் நடந்து சென்ற பெண் யானை துாக்கி வீசியதில் பலி

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் மம்தா, 33, கெலமங்கலத்திலுள்ள ேஹாட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று காலை, 6:30 மணிக்கு கெலமங்கலம் சாலையில் நடந்து சென்றார். அப்போது ஊடேதுர்க்கம் காப்புக்காட்டிலிருந்து வந்த ஐந்து யானைகள், கெலமங்கலம் - உத்தனப்பள்ளி சாலையை கடக்க முயன்றன.அப்போது சாலையில் சென்ற மம்தாவை, ஒரு யானை துாக்கி வீசியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலின்படி அங்கு கூடிய பொதுமக்கள், யானை நடமாட்டம் குறித்து தகவல் அளித்தும் வனத்துறையினர் மெத்தனமாக இருந்து விட்டதாக குற்றம் சாட்டி மறியலில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி போலீசார் பேச்சு நடத்தியதால் மறியல் கைவிடப்பட்டது. இறந்த மம்தாவின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் முதல்கட்டமாக, 50,000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. மேலும் அவரது குடும்பத்திற்கு, 9.50 லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுப்பதாக, வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை